/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடான பழைய ஊராட்சிமன்ற கட்டடம் சிங்கபெருமாள்கோவிலில் அபாயம்
/
வீடான பழைய ஊராட்சிமன்ற கட்டடம் சிங்கபெருமாள்கோவிலில் அபாயம்
வீடான பழைய ஊராட்சிமன்ற கட்டடம் சிங்கபெருமாள்கோவிலில் அபாயம்
வீடான பழைய ஊராட்சிமன்ற கட்டடம் சிங்கபெருமாள்கோவிலில் அபாயம்
ADDED : ஏப் 01, 2025 11:19 PM

சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள்கோவில் பாழடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை, ஆபத்தை உணராமல் சிலர், குடியிருப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.
இங்கு தேரடி தெருவில் கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம், ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்த கட்டடம் கட்டப்பட்டு, 25 ஆண்டுகளை கடந்ததால், மிகவும் சிதிலமடைந்து இடியும் நிலையில் இருந்தது.
அதன் பின், சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையம் அருகில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு, தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது.
தற்போது பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தை தனி நபர்கள் சிலர், வீடாக மாற்றி அதில் வசித்து வருகின்றனர்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள இவர்கள், ஆபத்தை உணராமல் இந்த பாழடைந்த கட்டடத்தில் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
கட்டடம் இடியும் நிலை ஏற்பட்டால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இங்கு வசித்து வருவோருக்கு அரசு சார்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.