/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்றில் குளித்த பெயின்டர் மாயம்
/
பாலாற்றில் குளித்த பெயின்டர் மாயம்
ADDED : அக் 23, 2025 10:36 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பாலாற்றில் குளித்த போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பெயின்டரை, தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் தென்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 48; பெயின்டர்.
இவர் நேற்று மதியம், தன் வீட்டின் அருகில் உள்ள பாலாற்றில் துணி துவைக்கச் சென்றார்.கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, பாலாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில், துணி துவைத்த பின் சுப்ரமணி, ஆற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.
இதைப் பார்த்த அங்கிருந்தோர், செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் இறங்கி சுப்ரமணியை தேடி வருகின்றனர்.

