/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளத்தில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்
/
குளத்தில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்
ADDED : அக் 09, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:தி.நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 40; ஆட்டோ ஓட்டுனர். இவரது நண்பர் வினோத், 30; டிப்பர் லாரி ஓட்டுனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சக்திவேல் மொட்டை அடிப்பதற்காக, இருவரும் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் ஆட்டோவில் வந்துள்ளனர். நேற்று மதியம் நடை சாத்தப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து, இருவரும் குளிக்க குளத்தில் இறங்கினர்.
வினோத் குளத்தின் படிக்கட்டின் பாதுகாப்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ள குளித்துள்ளார். சக்திவேல் குளத்தின் பாதுகாப்பு தடுப்பு கம்பியை தாண்டி, நடுப்பகுதி வரை சென்றுள்ளார். அப்போது, திடீரென மாயமானர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சக்திவேலை தேடி வருகின்றனர்.

