/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேர்வு அறைக்கு வந்த பாம்பு தெறித்து ஓடிய மாணவர்கள்
/
தேர்வு அறைக்கு வந்த பாம்பு தெறித்து ஓடிய மாணவர்கள்
தேர்வு அறைக்கு வந்த பாம்பு தெறித்து ஓடிய மாணவர்கள்
தேர்வு அறைக்கு வந்த பாம்பு தெறித்து ஓடிய மாணவர்கள்
ADDED : செப் 28, 2024 04:37 AM

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று காலை, பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்தது.
இதனால் மாணவர்கள், தங்களதுபுத்தக பைகளை வகுப்பறைக்கு வெளியே வைத்திருந்தனர்.
பள்ளி கட்டடத்திற்கும், சுற்றுச்சுவருக்கும் இடையே உள்ள புதர்களில், ஏராளமான பாம்பு பொந்துகள் உள்ளன.
அதிலிருந்து வெளியேறிய சிறிய நல்லபாம்பு ஒன்று, மாணவர்களின் புத்தக பைகளுக்குள் நுழைந்துள்ளது.
இதைக் கண்ட மாணவர்கள் பீதியடைந்து, தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
தகவலின்படி, கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு வந்து, புத்தக பையில் பதுங்கி இருந்த நல்லப்பாம்பை பிடித்தனர்.
சற்று நேரத்தில்,கட்டடத்தை ஒட்டியிருந்த புதரில் இருந்து வெளியேறிய, சிறிய கொம்பேரி மூக்கன் பாம்பு ஒன்றையும் அவர்கள் பிடித்தனர்.
இரு பாம்புகளையும் பத்திரமாக, ஏடூர் காப்புக்காட்டில் விடுவித்தனர்.
பள்ளி வளாகத்திற்குள் ஏராளமான பாம்புகள் இருப்பதாக கூறிய பெற்றோர், அங்குள்ள புதரை அகற்ற வேண்டு மென, கோரிக்கைவிடுத்துள்ளனர்.