தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வடகிழக்கு பருவமழைக்கு 33 குழுக்கள் அமைப்பு!: நீர்நிலைகள், கால்வாய்கள் சீரமைக்க வேண்டும்

வடகிழக்கு பருவமழைக்கு 33 குழுக்கள் அமைப்பு!: நீர்நிலைகள், கால்வாய்கள் சீரமைக்க வேண்டும்

வடகிழக்கு பருவமழைக்கு 33 குழுக்கள் அமைப்பு!: நீர்நிலைகள், கால்வாய்கள் சீரமைக்க வேண்டும்


UPDATED : செப் 04, 2026 07:38 PM

ADDED : செப் 04, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 07:38 PM ADDED : செப் 04, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு :

வடகிழக்கு பருவமழையையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 33 கண்காணிப்பு குழுக்களை நியமித்து, கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவினர், மாவட்டம் முழுதும் நடக்கும் பணிகளை ஆய்வு செய்து, மழைநீர் தேங்கும் பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில், பெய்த கனமழையால் செங்கல்பட்டு, செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய ஏழு தாலுக்காக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை காலத்தில், வழக்கத்தைவிட, அதிக மழை பெய்யும் சூழல் உள்ளது.

இதனால், வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு திட்ட பணிகள் மாவட்டம் முழுதும் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை செயல்படுத்த, 33 கண்காணிப்பு குழு கொண்ட அலுவலர்கள் நியமித்து, கலெக்டர் வீரப்பன், கடந்த 28ம் தேதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:

இந்த குழுவினர், மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் 71ஆகவும், பாதிக்கப்படக்கூடிய 319 பகுதிகளையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

புயல் பாதுகாப்பு மையங்கள் 19, தற்காலிக பாதுகாப்பு மையங்கள் 287 உள்ளன. இந்த மையங்களில், கட்டமைப்பு உறுதித்தன்மை, பாகாப்பு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம் ஆகியவை சரிபார்க்க வேண்டும்.

கனமழை வெள்ளம் எற்படும்போது, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள், மழைநீர் கால்வாய்கள் துார்வர வேண்டும்.

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 584 ஏரிகளும், 2,512 குளங்கள் ஆகியவற்றை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியோர் இணைந்து, மண்டல குழுவினர் ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், கண்காணிப்பு குழு அலுவலர்களின்

கண்காணிப்பு குழு அலுவலர்கள் எண்

2கண்காணிப்பு குழு தலைவர் இடம் மொபைல் எண் 1 சாம்கிங்ஸ்டன் , ஆணையர் செங்கல்பட்டு நகராட்சி 7397372826 2 சுதா, ஆணையர் மறைமலைநகர் நகராட்சி 7397382211 3 பூங்கொடி வட்டாட்சியர், செங்கல்பட்டு 9445000500 4 கலைச்செல்வன்,வட்டார வளர்ச்சி அலுவலர், காட்டாங்கொளத்துார் 7402606061 5 சிவகலைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர், காட்டாங்கொளத்துார் 7402606062 6 வெங்கட்ரமணன், வட்டாட்சியர், திருப்போரூர் 9384094642 7 அரிபாஸ்கர் ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர், திருப்போரூர் 7402606072 8 சங்கீதா செயல் அலுவலர், திருப்போரூர் 8925809275 9 கலைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர், திருப்போரூர் 7402606071 10 புஷ்பலதா, வட்டாட்சியர், திருக்கழுக்குன்றம் 9445000501 11 அபர்ணா, ஆணையர், மாமல்லபுரம் நகராட்சி 8925809212 12 லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர், திருக்கழுக்குன்றம் 7402606066 13 சுகந்திரன், ஆணையர், மதுராந்தகம் நகராட்சி 7397372822 14 மீனாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர், மதுராந்தகம் 7402606056 15 சுரேஷ்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர், மதுராந்தகம் 7402606043 16 ராஜன், வட்டாட்சியர், செய்யூர் 9445000504 17 கவுரி, வட்டார வளர்ச்சி அலுவலர், லத்துார் 7402606051 18 அருள்குமார், செயல் அலுவலர், இடைக்கழிநாடு 8925809272



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us