/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
/
மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
ADDED : நவ 01, 2024 08:28 PM
புதுப்பட்டினம்:புதுப்பட்டினத்தில், மேற்கு வங்க வாலிபர், மூன்றாம் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் ரபிதாஸ், 35; கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம் பகுதியில், கட்டுமான தொழில் செய்பவரிடம், கூலித் தொழிலாளியாக இருந்தார். பஜார் சாலையில் உள்ள கட்டடத்தில், மூன்றாம் மாடியில், பலருடன் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, உடனிருந்தவர்களுடன் தீபாவளி கொண்டாடி மது அருந்தியதாக கூறப்படும் நிலையில், நேற்று; காலை 5:00 மணிக்கு, தரையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
கல்பாக்கம் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இரவில் மாடியிலிருந்து தவறி, விழுந்து இறந்திருக்கலாம் என கருதி, போலீசார் விசாரிக்கின்றனர். அவருடன் பணிபுரியும் அப்துல் ராமதாஸ், போலீசில் புகார் அளித்தார்.

