/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது செங்கையில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
/
பொது செங்கையில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
ADDED : ஏப் 08, 2025 12:23 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு பாசி தெருவைச் சேர்ந்தவர் மன்சூர் அலி, 48. செங்கல்பட்டு செட்டி தெரு மணிக்கூண்டு அருகில், துணிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை மூடி விட்டுச் சென்றார். நேற்று காலை கடையை திறக்க சென்ற போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்திருந்த 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
மேலும், அருகில் உள்ள சம்ஸ்கனி,50, என்பவரின் துணிக்கடையில் 3,000 ரூபாயும், தினேஷ் குமார் என்பவரின் மொபைல் போன் கடையின் பூட்டை உடைத்து 5,500 ரூபாயும் திருடப்பட்டது தெரிந்தது.
இது குறித்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.