/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் வரும் பிப்., 23ல் தெப்போற்சவம்
/
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் வரும் பிப்., 23ல் தெப்போற்சவம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் வரும் பிப்., 23ல் தெப்போற்சவம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் வரும் பிப்., 23ல் தெப்போற்சவம்
ADDED : பிப் 07, 2024 09:54 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், வரும் 23ம் தேதி மாசி மக தெப்போற்சவம் மற்றும் மறுநாள் சுவாமி கடலில் தீர்த்தவாரி நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மாமல்லபுரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர்.
இங்கு ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு, தெப்போற்சவம் மற்றும் சுவாமி தீர்த்தவாரி நடத்தப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொண்டு, பாலாலயத்தில் இருந்ததால், உற்சவங்கள் நடத்தப்படவில்லை.
பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, மீண்டும் உற்சவங்கள் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மாசி மகத்தை முன்னிட்டு, வரும் 23ம் தேதி இரவு, புண்டரீக புஷ்கரணி திருக்குளத்தில் தெப்போற்சவம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மறுநாள் காலை, கடலில் சுவாமி தீர்த்தவாரி நடத்தப்படுவதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

