/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் சிங்காரத்தோட்டம் பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை
/
வண்டலுார் சிங்காரத்தோட்டம் பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை
வண்டலுார் சிங்காரத்தோட்டம் பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை
வண்டலுார் சிங்காரத்தோட்டம் பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை
ADDED : மே 23, 2025 09:46 PM
வண்டலுார்:வண்டலுார் ஊராட்சி, சிங்காரத்தோட்டம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், பகுதிவாசிகள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில் 15 வார்டுகளில், 50,000க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.
இங்கு, கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் வாயிலாக நீர் உறிஞ்சப்பட்டு, 20 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு, குழாய் வழியாக குடிநீர் விநியோகம் நடக்கிறது.
இதில், வார்டு 4க்கு உட்பட்ட சிங்காரத்தோட்டம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை.
இதனால், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார், கடைகளில் விற்கப்படும் குடிநீர் கேன்களை வாங்கி, சமையல் உட்பட இதர தேவைகளுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
சிங்காரத்தோட்டம் பகுதியில், பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோக குழாய்களில் விரிசல் ஏற்பட்டு, பல இடங்களில் நீர்க் கசிவு ஏற்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தற்போது, புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்திற்குள் பணிகள் முடிந்து, மீண்டும் குடிநீர் விநியோகம் தடையின்றி நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.