/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போந்துார் சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் தடுமாற்றம்
/
போந்துார் சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் தடுமாற்றம்
போந்துார் சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் தடுமாற்றம்
போந்துார் சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் தடுமாற்றம்
ADDED : ஜூன் 02, 2025 11:43 PM

சித்தாமூர், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில், போந்துார் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்தில், மதுராந்தகம் - சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அச்சிறுபாக்கம் செல்லும் சாலையின் முக்கிய சந்திப்பு உள்ளது.
தினமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து மற்றும் லாரி என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக அச்சிறுபாக்கத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் வாகனங்கள் மற்றும் மதுராந்தகத்தில் இருந்து அச்சிறுபாக்கம் செல்லும் வாகனங்கள், சாலை வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, போந்துார் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.