/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் சமன்படுத்த ஏரி மண் கரை வலுவிழந்து உடையும் அபாயம்
/
சாலையோரம் சமன்படுத்த ஏரி மண் கரை வலுவிழந்து உடையும் அபாயம்
சாலையோரம் சமன்படுத்த ஏரி மண் கரை வலுவிழந்து உடையும் அபாயம்
சாலையோரம் சமன்படுத்த ஏரி மண் கரை வலுவிழந்து உடையும் அபாயம்
ADDED : ஆக 04, 2025 11:30 PM

சூணாம்பேடு, சாலையோரம் சமன்படுத்த ஏரிக்கரை மண் எடுத்து பயன்படுத்துவதால், கரை வலுவிழந்து ஏரி உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சூணாம்பேடு அருகே தென்னேரிப்பட்டு கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த ஏரி வாயிலாக 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், வேலுார் கிராமத்தில் இருந்து தென்னேரிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் தார் சாலை பல ஆண்டுகளாக, முழுதும் பழுதடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாய் இருந்தது.
இதனால், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ் 1.5 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடையாமல் இருக்க, குவாரிகளில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணை வைத்து சமன்படுத்துவது வழக்கம், ஆனால் இந்த சாலை விரிவாக்கப்பணியின் போது, தென்னேரிப்பட்டு ஏரிக்கரையில் இருந்து 4 அடி அளவிற்கு பள்ளம் தோண்டி, அந்த மண்ணை சாலையோரத்தில் சமன்படுத்தியுள்ளனர்.
இதனால் பருவமழையின் போது ஏரி முழு கொள்ளளவை எட்டினால், கரை வலுவிழந்து உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

