sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் பதிவகத்தில் நில ஆவண பதிவேடு இல்லை... அதிர்ச்சி: குழு அமைத்து உண்மை கண்டறிய ஆணையம் உத்தரவு

/

செய்யூர் பதிவகத்தில் நில ஆவண பதிவேடு இல்லை... அதிர்ச்சி: குழு அமைத்து உண்மை கண்டறிய ஆணையம் உத்தரவு

செய்யூர் பதிவகத்தில் நில ஆவண பதிவேடு இல்லை... அதிர்ச்சி: குழு அமைத்து உண்மை கண்டறிய ஆணையம் உத்தரவு

செய்யூர் பதிவகத்தில் நில ஆவண பதிவேடு இல்லை... அதிர்ச்சி: குழு அமைத்து உண்மை கண்டறிய ஆணையம் உத்தரவு


ADDED : டிச 17, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'செய்யூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 1994ம் ஆண்டுக்கு முந்தைய நில ஆவணங்களை சரிபார்க்கும் பதிவேடு இல்லை' என்ற, சார் - பதிவாளரின் பதிலால், சர்ச்சை எழுந்துள்ளது. 'குழு அமைத்து உண்மை கண்டறிய வேண்டும்' என, மாவட்ட பதிவாளருக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர், ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்.

இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பொது தகவல் அலுவலருக்கு, கடந்த 2022ல் ஒரு தகவல் கேட்டு விண்ணப்பித்தார்.

அதில், கூவத்துார் அருகே பெருந்துறவு கிராமத்தில், குறிப்பிட்ட புஞ்சை நில எண்ணில் உள்ள, 1.04 ஏக்கர் நிலம், குறிப்பிட்ட பட்டா எண்ணின்படி, என் தந்தை ஏழுமலை நாயக்கர் என்ற பெயரில் உள்ளது.

இந்த நிலத்தை, சொக்கலிங்கம் மகன் நாராயணன் என்பவர் விற்பனை செய்துள்ளார்.

என் தந்தை பெயரில் உள்ள இந்த நிலத்தை, எந்த மூல ஆவணங்கள் அடிப்படையில் நாராயணன் விற்பனை செய்தார் என்ற விபரம் தெரியவில்லை.

மேலும், கணினி பட்டா எண்ணின்படி, 1.04 ஏக்கர் நிலம், எந்த மூல ஆவணங்கள் அடிப்படையில், பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்ற விபரம் மற்றும் ஆவணத்தின் நகலை வழங்க வேண்டும் என, தகவல்கள் கேட்டிருந்தார்.

மனுதாரர் நாகராஜன் கேட்ட தகவல்கள் கிடைக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக, சமீபத்தில் விசாரணை நடந்தது.

ஆஜர்


செய்யூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தென்னரசு மற்றும் செய்யூர் பொறுப்பு சார் - பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர். இவர்கள் இருவரும், பொதுத் தகவல் அலுவலராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநில தகவல் ஆணையத்தின் முன் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்கையில், மனுதாரரின் மனுவிற்கு இது நாள் வரை எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

எனவே, 2022ல் பதவியில் இருந்த அப்போதைய பொது தகவல் அலுவலரும், தற்போதைய மதுராந்தகம் தலைமையிடத்து துணை வட்டாட்சியருமான பாலச்சந்தர் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரண விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், மனுதாரரின் மனுவை, 2022 அக்., 6ம் தேதியிட்டு, செய்யூர் சார் - பதிவாளருக்கு அனுப்பியுள்ளார்.

அம்மனுவிற்கு எவ்வித பதிலையும், அப்போதைய பொது தகவல் அலுவலரும், தற்போதைய தென்காசி சார் - பதிவாளருமான பாலாஜி அளிக்கவில்லை. எனவே, முன்னாள் பொது தகவல் அலுவலர் பாலாஜி மீது, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரண விளக்கத்தை, வரும் 29ம் தேதிக்குள், ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில தலைமை தகவல் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது.

அதற்கு, செ ய்யூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தென்னரசு பதிலளிக் கையில்,''மேற்குறிப்பிட்ட சொத்து, மனுதாரரின் பெயரில் தான் இருந்தது. 1994ம் ஆண்டு எவ்வித முன் ஆவணமும் இல்லாமல், நாராயணன் என்பவரால் பதிவு செ ய்யப்பட்டு உள்ளது. இதில், மூன்றாம் நபருக்கு எவ்வித தொடர்பும் இல்லை,'' என தெரிவித்தார் .

பதிவேடு


செய்யூர் சார் - பதிவாளர் கிரு ஷ்ணமூர்த்தி, 2023 ஜன., 27ம் தேதியிட்ட கடிதம் ஒன்றை, தகவல் ஆணையம் முன் சமர்ப்பித்தார். அதில், '1994ம் ஆண்டுக்கு முன் ஆவணங்களை சரிபார்க்கும் பதிவேடு, செய்யூர் சார் - பதிவாளர் அலுவலக பராமரிப்பி ல் இல்லை' என, குறிப்பிடப்பட் டுள்ளது. மனுதாரரும், அக்கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றதாக ஒப்புக் கொண்டார்.

அவரின் முக்கிய கோரிக்கையாக, 'தன் தந்தைக்கு உரிமையான சொத்தை நாராயணன் மோசடியாக, மற்றொரு நபருக்கு விற்றுள்ளார். அது தொடர்பாக, நாராயணன் தாக்கல் செய்த முன் ஆவணங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்' என்றார்.

உத்தரவு



இரு தரப்பினரையும் விசாரித்த, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பி த்த உத்தரவு:

செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர், ஒரு குழு அமைத்து, மேற்சொன்ன மனுதாரரின் தந்தைக்கு உரிமையான சொத்து, எதன் அடிப்படையில் நாராயணன் என்பவரால், மற்றொரு நபருக்கு விற்கப்பட்டது என்பது குறித்து, விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, வரும் 29ம் தேதி ஆணையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us