/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருந்து கடையில் பணம் ஆட்டை கேமராவை உடைத்து தப்பிய திருடன்
/
மருந்து கடையில் பணம் ஆட்டை கேமராவை உடைத்து தப்பிய திருடன்
மருந்து கடையில் பணம் ஆட்டை கேமராவை உடைத்து தப்பிய திருடன்
மருந்து கடையில் பணம் ஆட்டை கேமராவை உடைத்து தப்பிய திருடன்
ADDED : மே 22, 2025 01:46 AM

வண்டலுார்:வண்டலுார், அண்ணா தெருவைச் சேர்ந்த முரளிதரன், 32, என்பவர், அதே பகுதி முதலாவது பிரதான சாலையில், மருந்து கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து, கடையை பூட்டிச் சென்றார்.
நேற்று காலை, 7:00 மணியளவில், கடையின் 'ஷட்டர்' திறந்து கிடப்பதாக, அவ்வழியே சென்றவர்கள் முரளிதரனுக்கு தகவல் கூறியுள்ளனர்.
முரளிதரன் வந்து பார்த்த போது, கடையின் ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த இரண்டு பூட்டுகளும், உட்புற கண்ணாடி கதவும் உடைக்கப்பட்டு இருந்தன.
தவிர, கல்லாவில் வைத்திருந்த, 7,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.
அத்துடன், கடை வெளியே மற்றும் உள்ளே பொருத்தியிருந்த மூன்று கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்த புகாரின்படி, ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு அருகே மற்ற கடைகளில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், நேற்று அதிகாலை 1:30 மணியளவில், தலையில் தொப்பி அணிந்து, முகத்தை துணியால் மூடியபடி, கையில் இரும்பு கம்பியுடன், 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வருகிறார்.
அவர், கடையின் ஷட்டர் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, உள்ளே சென்று திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
அந்த காட்சியின் அடிப்படையில், மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.