தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்

 இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்

 இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்


ADDED : மார் 05, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில், மேற்கு உள் மாடவீதியில், துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு, தபால் அலுவலர், உதவியாளர், தபால்காரர்கள் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். இந்த தபால் நிலையம், அதனை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவை வழங்கி வருகிறது.

நெருக்கடியான இடத்தில் செயல்படும் இந்த அலுவலகத்தில், மக்கள் நிற்பதற்கு கூட இடமில்லை.

பணம் செலுத்துதல், எடுத்தல், புதிய கணக்கு துவங்குதல், தபால் அனுப்புதல் என, பல தேவைக்கு வருவோர் சிரமப்படுகின்றனர்.

இட நெருக்கடியால், தபால் நிலையம் வருவோர் திரும்பி சென்று, மீண்டும் மக்கள் கூட்டம் குறைந்ததும் வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, இந்த நிலையத்தில் போதிய டெலிவரி ஊழியர்கள் இல்லாததால் முக்கிய ஆவணம், பார்சல்களை உரிய நேரத்தில் வழங்கும் பணி தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, போதிய டெலிவரி ஊழியர்கள் நியமிக்கவும், தபால் நிலைய அலுவலகத்தை விரிவுப்படுத்தவும், தபால் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us