/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் பேரூராட்சி வார்டு சபா கூட்டம்
/
திருப்போரூர் பேரூராட்சி வார்டு சபா கூட்டம்
ADDED : அக் 29, 2025 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி ஆறாவது வார்டு, அபிராமி நகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில், வார்டு சபா கூட்டம் நேற்று நடந்தது.
6வது வார்டு கவுன்சிலர் லோகநாதன் தலைமை வகித்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் சங்கீதா, இளநிலை உதவியாளர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
மேலும் மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தில், மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

