/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுவர் கிரிக்கெட் திருவள்ளூர், செங்கை வெற்றி
/
சிறுவர் கிரிக்கெட் திருவள்ளூர், செங்கை வெற்றி
ADDED : டிச 29, 2024 01:54 AM
சென்னை,
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான முதலாவது தாகூர் யூ - 12 மாநில கிரிக்கெட் போட்டி, ஆவடியில் நடக்கின்றன.
போட்டியில், 'ஏ' பிரிவில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை அணிகளும், 'பி' பிரிவில், திருவள்ளூர் டி.சி.ஏ., - செங்கல்பட்டு, வேலுார் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்து கல்லுாரியில் நடந்த, 'பி' மண்டல போட்டியில், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அணிகள் எதிர்கொண்டன.
'டாஸ்' வென்ற திருவள்ளூர் அணி, முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு, 118 ரன்கள் அடித்தது.
அடுத்து களமிறங்கிய திருவண்ணாமலை அணி, 28 ஓவர்களில் 55 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 63 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், செங்கல்பட்டு அணி, 35 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு, 171 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, வேலுார் அணி, 35 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 58 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.