/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கோவில்களில் திருவிளக்கு பூஜை
/
செங்கை கோவில்களில் திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 17, 2025 01:08 AM

செங்கல்பட்டு:ஆத்துார் முக்தீஸ்வரர் கோவில், சின்னமேலமையூர் சின்னமுத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது.
செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தில், உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை, நடைபெறும்.
நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு, அன்னதானம் பிரசாதம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
செங்கல்பட்டு, சின்னமேலமையூர் பகுதியில் சின்னமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 89ம் ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி, விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை, நேற்று முன்தினம் நடந்தது.
பின், சின்னமுத்து மாரியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கிப்பட்டன. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அறங்காவலர் குமாரசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.