/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழுப்பேடு - ஒரத்தி சாலை விரிவாக்கப்பணி
/
தொழுப்பேடு - ஒரத்தி சாலை விரிவாக்கப்பணி
ADDED : நவ 23, 2025 01:55 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே தொழுப்பேடு - ஒரத்தி நெடுஞ்சாலை விரிவாக்கபணி நடந்து வருகிறது.
சென்னை - - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, தொழுப்பேடு, ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லுாரிக்கான பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை, அகலம் குறைவாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 3 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டமாக எடையாளம் பகுதியில் இருந்து கீழ் அத்திவாக்கம் வரையிலான 3 கிலோ மீட்டர் துாரம் அகலப்படுத்தும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

