/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருட்டு வழக்கில் சிக்கியவர்கள் தப்பி ஓட்டம்
/
திருட்டு வழக்கில் சிக்கியவர்கள் தப்பி ஓட்டம்
ADDED : செப் 06, 2025 01:37 AM
செங்கல்பட்டு:திருட்டு வழக்கில் சிக்கிய மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இருவர், போலீசாரிடம் இருந்து தப்பி சென்றனர்.
மேற்கு வங்க மாநிலம், ஹர்சாகர் பேரக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இருவரும் அங்கிருந்து தப்பி, தமிழகத்திற்கு வந்துள்ளதாக மேற்கு வங்க போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்களது மொபைல் போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பதுங்கியிருந்தது தெரிந்தது.
இதையடுத்து மேற்கு வங்கி மாநிலம், பேரக்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிம்பம் முஹரி என்பவர் தலைமையிலான போலீசார், நேற்று செங்கல்பட்டு வந்தனர். பாலுார் அடுத்த கொளத்துார் குப்பை கிடங்கு பகுதியில் பதுங்கி இருந்த, இரண்டு நபர்களை கைது செய்தனர்.
செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் த இருவரையும் அழைத்து சென்ற போது, நீதிமன்ற வளாகத்தில் போலீசாரை கீழே தள்ளிவிட்டு தப்பித்து சென்றனர்.
இதில் கீழே விழுந்த இன்ஸ்பெக்டர் ஹரிம்பம் முஹுரி மயக்க மடைந்தார். சக போலீசார் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.