/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
20 நாளாக குடிநீர் விநியோகம் இல்லை தோட்டச்சேரி மக்கள் சாலை மறியல்
/
20 நாளாக குடிநீர் விநியோகம் இல்லை தோட்டச்சேரி மக்கள் சாலை மறியல்
20 நாளாக குடிநீர் விநியோகம் இல்லை தோட்டச்சேரி மக்கள் சாலை மறியல்
20 நாளாக குடிநீர் விநியோகம் இல்லை தோட்டச்சேரி மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 27, 2025 12:21 AM

சூணாம்பேடு:தோட்டச்சேரி கிராமத்தில் 20 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட தோட்டச்சேரி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் செயல்படும் தனியார் உப்பு உற்பத்தி ஆலையால் நிலத்தடி நீர்மட்டம் முழுதும் உப்புத் தன்மையாக மாறியுள்ளதால், ஒத்திவிளாகம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலமாக மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய் மூலமாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் குடிநீர் குழாய் சேதமடைந்ததால் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் குடிநீர் குழாய் சீரமைக்கப்படாததால், கிராம மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சூணாம்பேடு போலீசார் பேச்சு நடத்தி குடிநீர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.