ADDED : அக் 08, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்,வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ், 35, மற்றும் சங்கர் ராஜ் 40. சகோதரர்கள். அய்யம்பேட்டை பகுதியில் மளிகை கடை வைத்துள்ளனர்.
இந்நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாலாஜாபாத் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, அக்கடையில் குட்கா, புகையிலை போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சகோதரர்கள் அரவிந்தராஜ் மற்றும் சங்கர்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதே போன்று, கருக்குப்பேட்டை பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்யும் செல்வி, 58, என்பவருக்கு சொந்தமான கடையிலும், குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, செல்வி கைது செய்யப்பட்டார்.

