ADDED : மார் 23, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு;செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு ராமன், 23.வல்லம் ரயில்வே மேம்பாலம் அருகில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை கடையில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது அவரை மடக்கிய மூன்று பேர் விஷ்ணுராமனை தாக்கி அவர் வைத்திருந்த ஐ போன் 15 பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்த கோபிநாத், 19, ராட்டினங்கிணறு பகுதியை சேர்ந்த குமரவேல்,19.செங்கல்பட்டு காமராஜர் நகரை ஜோதிதாஸ்,19.ஆகிய மூவரை கைது செய்து ஐ போனை பறிமுதல் செய்தனர். பின் மூவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
