sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிங்கப்பூர் நபர் மர்ம மரணம் வழக்கு நகை, பணத்திற்காக கொன்ற மூவர் கைது

/

சிங்கப்பூர் நபர் மர்ம மரணம் வழக்கு நகை, பணத்திற்காக கொன்ற மூவர் கைது

சிங்கப்பூர் நபர் மர்ம மரணம் வழக்கு நகை, பணத்திற்காக கொன்ற மூவர் கைது

சிங்கப்பூர் நபர் மர்ம மரணம் வழக்கு நகை, பணத்திற்காக கொன்ற மூவர் கைது


ADDED : மே 08, 2025 01:38 AM

Google News

ADDED : மே 08, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கமணி, 66. இவர், 40 ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று, அங்கேயே குடியுரிமை பெற்று குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவருக்கு, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அருகே கண்டிகையில், அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், கடந்த ஏப்., 16ம் தேதி தங்கமணியும், சிங்கப்பூரில் வசிக்கும் அவரது சகோதரர் சுப்பிரமணியும் தமிழகம் வந்து கண்டிகையில் உள்ள வீட்டில் தங்கினர்.

ஏப்., 26ம் தேதி, தங்கமணி வீட்டிலிருந்து ஒருவருடன் பைக்கில் சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தாழம்பூர் போலீசில் அவரது சகோதரர் சுப்பிரமணி புகார் அளித்தார்.

இதற்கிடையில், விபத்தில் காயமடைந்ததாக கூறி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர், கடந்த 3ம் தேதி இறந்ததாக, மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அந்த நபர் தங்கமணி என தெரிந்தது.

இதையடுத்து சுப்பிரமணி, தன் சகோதரர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார்.

போலீசார் விசாரித்து வந்த நிலையில், தலையில் தாக்கப்பட்டும், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும் தங்கமணி இறந்திருப்பதாக, பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐ., ரமேஷ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரை மொபைல் போன் எண் வாயிலாக கண்காணித்து, நேற்று காலை 11:00 மணியளவில், சென்னை, ஆலத்துாரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பிடித்தனர். அவர், திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 30, என தெரிந்தது.

விசாரணையில், ஆனந்தனும், சிங்கப்பூர் தங்கமணியும் கண்டிகையில் மது வாங்க வரும் போது ஏற்கனவே அறிமுகமாகி, கடந்த இரு ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, தங்கமணியிடம் அதிக அளவில் பணம், விலை உயர்ந்த மொபைல்போன் இருந்ததை அறிந்த ஆனந்தன், மதுராந்தகத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஸ்ரீகாந்த், 29, பார்த்தீபன், 36, ஆகியோருடன் சேர்ந்து தங்கமணியை தாக்கி ஐபோன், தங்க செயின், மோதிரம், பணம் ஆகியவற்றை பறித்தது தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் மேற்கண்ட மூவரையும் நேற்று கைது செய்து, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை, செங்கல்பட்டு எஸ்.பி., சாய்பிரணீத், மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் ஆகியோர் பாராட்டி, ஊக்கப்பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us