/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார் மீது டாரஸ் லாரி மோதி விபத்து சிங்கபெருமாள்கோவிலில் மூவர் பலி
/
கார் மீது டாரஸ் லாரி மோதி விபத்து சிங்கபெருமாள்கோவிலில் மூவர் பலி
கார் மீது டாரஸ் லாரி மோதி விபத்து சிங்கபெருமாள்கோவிலில் மூவர் பலி
கார் மீது டாரஸ் லாரி மோதி விபத்து சிங்கபெருமாள்கோவிலில் மூவர் பலி
ADDED : ஏப் 01, 2025 11:17 PM

மறைமலைநகர்:மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 40. இவரது மனைவி நந்தினி, 32. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக்க, தன் குழந்தைகள் இளமதி, 7, சாய்வேலன், 1, தந்தை அய்யனார், 70, தாய் தெய்வபூஞ்சாரி, 52, ஆகியோருடன் ஹூண்டாய் காரில், மதுரை நோக்கிச் சென்றார்.
மதுரை, பாலமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன்,24, என்பவர், காரை ஓட்டினார்.
ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி போக்குவரத்து சிக்னலில் கார் நின்றது.
அப்போது, பின்னால் வந்த 'பாரத் பென்ஸ் டாரஸ்' லாரி, காரின் மீது மோதியது. இதில், முன்னால் நின்ற கன்டெய்னர் லாரியின் அடியில் கார் சிக்கி நசுங்கியது.
இந்த விபத்தில் அய்யனார், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், படுகாயமடைந்த நந்தினி, தெய்வபூஞ்சாரி, இளமதி, சாய்வேலன் மற்றும் டாரஸ் லாரி ஓட்டுனரான, செங்கல்பட்டு அடுத்த பாத்திமா நகரைச் சேர்ந்த அந்தோணிராஜ்,42, உள்ளிட்டோரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, குழந்தை சாய்வேலன் உயிரிழந்தான். மற்ற நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்த விபத்து காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
'கிரேன்' இயந்திரம் வாயிலாக, விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அகற்றி, நெரிசலை சீரமைத்தனர்.

