கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு
UPDATED : ஜூலை 18, 2026 07:33 PM
ADDED : ஜூலை 18, 2026 07:13 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கி, நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தள்ளது.
செங்கல்பட்டு முதல் நிலை நகராட்சியில், 33 வார்டுகளில், 70,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு நகரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கவும், டெங்கு கொசுப் புழுக்களை ஒழிக்கவும் ஒப்பந்த முறையில் 70 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பருவ மழைகாலத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஒப்பந்த பணியாளர்களின் பணிக்காலம், முடிவடைந்துள்ளது. இந்நிலையில், பருவமழை காரணமாக டெங்கு தடுப்பு பணியின் முக்கியத்தும் கருதி, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம், இவர்களுக்கான ஒப்பந்தத்தை மூன்று மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இதனால், மீண்டும்,
அதன்பின், ஒப்பந்ததாரருக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
