/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கம்பம் மீது மோதி விபத்து டிப்பர் லாரி ஓட்டுநர் பலி
/
கம்பம் மீது மோதி விபத்து டிப்பர் லாரி ஓட்டுநர் பலி
கம்பம் மீது மோதி விபத்து டிப்பர் லாரி ஓட்டுநர் பலி
கம்பம் மீது மோதி விபத்து டிப்பர் லாரி ஓட்டுநர் பலி
ADDED : ஜூன் 03, 2025 12:10 AM

செங்குன்றம், சென்னை அருகே செங்குன்றத்திலிருந்து ஆந்திரா நோக்கி, டிப்பர் லாரி ஒன்று நேற்று மாலை கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை திருவண்ணாமலையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 42, இயக்கினார்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை கம்பம் மீது மோதியது.
இதில், பெயர் பலகை கம்பத்துடன் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில், லாரியின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.
அப்பகுதியில் இருந்தோர், உடனடியாக கோபாலகிருஷ்ணனை மீட்டு, அருகிலுள்ள பாடியநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கோபாலகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.