sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ய... தடை!  அரசு இடங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

/

வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ய... தடை!  அரசு இடங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ய... தடை!  அரசு இடங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ய... தடை!  அரசு இடங்களை பயன்படுத்த கட்டுப்பாடு


ADDED : மார் 19, 2024 03:52 AM

Google News

ADDED : மார் 19, 2024 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, : லோக்சபா தேர்தலில், கோவில், மத வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதோடு, அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து, தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க கூடாது எனவும், அரசியல் கட்சியினருக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி தேர்தல் அலுவலருமான கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப்- - கலெக்டர் நாராயணசர்மா, செங்கல்பட்டு எஸ்.பி., சாய் பிரணீத் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்.

லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துகளை, அரசியல் கட்சியினர் மனுவாக அளிக்கலாம். இந்த மனுக்களின் மீது பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டசபை தொகுதிவாரியாக, உதவி தேர்தல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.பி., சாய் பிரணீத் பேசியபோது, ''லோக்சபா தேர்தலில், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அனுமதி பெற, அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்க வேண்டும்,'' என்றார்.

நடத்தை விதிமுறைகள்


 ஓட்டுகளை பெறுவதற்காக, இனம் மற்றும் மத உணர்வுகளைத் துாண்டும் வகையில், வேண்டுகோள் விடுக்கப்படக்கூடாது. தேர்தல் பிரசாரக் களமாக, மசூதி, சர்ச் மற்றும் கோவில் போன்ற வழிபாட்டு தலங்களை பயன்படுத்தக்கூடாது

 தேர்தல் தேதி அளிவிக்கப்படுவதற்கு முன்பே துவங்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். திடல் போன்ற பொது இடங்கள், அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்கள் நடத்துவதற்கு எவ்வித சார்புமின்றி வழங்கப்பட வேண்டும்

 ஹெலிகாப்டர்கள் இறங்கும் தளங்களும் இந்த திடல்களில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு எவ்வித சார்புமின்றி வழங்கப்பட வேண்டும்

 தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் இடம் குறித்து, உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, முன் அனுமதியும் பெற வேண்டும். கட்சி தொண்டர்கள், பணியாளர்கள் அனைவரும், கட்சியின் சின்னம் அல்லது அடையாள அட்டையை அணிய வேண்டும்

 குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்த வாக்காளராகவோ, வேட்பாளராகவோ அல்லது வேட்பாளரின் முகவராகவோ இல்லாதவர்கள், தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன், அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

 அரசு செலவில் மேற்கொள்ளப்படும் கட்சி மற்றும் ஆளுங்கட்சியின் சாதனைகள் தொடர்பான அனைத்து விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன

 கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் அல்லது பிற வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்வது, தேர்தலை பற்றி பேசுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது, பிரசாரப் பாடல்களை இசைப்பது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது

 போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கும். அமைதி ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கும் வசதியாக, கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்த தகவல்களை, கட்சியோ, வேட்பாளரோ, உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்

 ஊர்வலத்தில் பங்கேற்போர், உணர்ச்சி பெருக்கால் தங்கள் கையில் கொண்டு செல்லும் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்த இயலாத வண்ணம், இயன்றவரை உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினரோ, வேட்பாளர்களோ மேற்கொள்ள வேண்டும்

 அரசியல் கட்சிகள், தங்களின் தற்காலிக பிரசார அலுவலகங்களை, அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து அமைக்கக் கூடாது

 தற்காலிக அலுவலகங்களில், ஒரே ஒரு கட்சி கொடியையும், ஒரு பேனர் அல்லது போட்டோவையும் வைத்துக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us