
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆபத்தான பள்ளத்தை
சீரமைக்க வேண்டும்
கி ளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நுழைவு பகுதியில், மழைநீர் வடிகால் உள்ளது.
இந்த வடிகால் மீது பொருத்தப்பட்டுள்ள மண் வடிகட்டி, கடந்த இரு மாதங்களுக்கு முன் உடைந்து, பள்ளம் உருவானது.
பேருந்து முனையத்திற்குள் நுழையும் அரசு பேருந்துகள், இவ்வழியாக செல்லும்போது, சக்கரங்கள் பள்ளித்தில் சிக்கி, விழுந்து, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை சீர்செய்யும்படி 'சி.எம்.டி.ஏ.,' அலுவலகத்தில், பலமுறை முறையிட்டும், நடவடிக்கை இல்லை. மெத்தன போக்கில் உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து, மண் வடிகட்டியால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.பெருமாள், அரசு பேருந்து ஓட்டுநர்.

