/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
ADDED : செப் 19, 2024 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு;செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் கூட்டு சாலையில் உள்ள கடையில், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள பழனி, 57, என்பவரின் கடையில் சோதனை செய்த போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, பழனி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.