தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் எஸ்.கே., அகாடமிக்கு சிறப்பு பரிசு

மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் எஸ்.கே., அகாடமிக்கு சிறப்பு பரிசு

மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் எஸ்.கே., அகாடமிக்கு சிறப்பு பரிசு


ADDED : ஜூன் 09, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டியில், சிறப்பான பங்களிப்பை அளித்து சிறந்த அகாடமிக்கான விருதை எஸ்.கே., அகாடமி கைப்பற்றியது.

தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி, ஐ.சி.எப்., அரங்கில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

ஆண்கள் இறுதிப்போட்டியில், ஆர்.டி.டி.எச்.பி.சி., வீரர் எஸ்.தருண் 11 – -8, 8- – 11, 11 – -7, 4 – -11, 12 – -10, 15 – -13 என்ற செட் கணக்கில், அதே அகாடமி வீரர் கே.உமேஷை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.

பெண்கள் பிரிவில், ஆர்.டி.டி.எச்.பி.சி., அகாடமியின் செலினா தீப்தி 11- – 9, 11- – 5, 11 – -9, 8 – -11, 6 – -11, 10 – -12, 11 – -5 என்ற கணக்கில் எஸ்.கே.அகாடமியின் எஸ்.யாஷினியை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றினார்.

* 19 வயதுக்கு உட்பட்டோருக்கான யு – 19 பிரிவில், சென்னை அச்சீவர்ஸ் அகாடமியின் எஸ்.ஸ்ரீராம் மற்றும் எம்.வி.எம்., வீராங்கனை பி.ஆர்.நந்தினி வெற்றி பெற்றனர்.

* யு – 17 பிரிவில், எஸ்.கே., அகாடமியின் எம்.முகமது மற்றும் ‘ஏஸ்’ டி.டி.ஏ., வீராங்கனை ஆர்.மெர்சி சாம்பியன் பட்டம் வென்றனர்.

* யு – 15 பிரிவில், எஸ்.கே.அகாடமியின் சஞ்சய் அர்விந்த், துரோணாச்சார்யா டி.டி.ஏ., வீராங்கனை சின்பனன்யா நந்தகோபால் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

* யு – 13 பிரிவில், ‘பெஸ்ட் ஷாட்’ டி.டி.ஏ., வீரர் ஆர்.சுஜேத் மற்றும் அதே அகாடமியின் என்.சஹானா வெற்றி பெற்றனர்.

* யு – 11 பிரிவில், ‘வின்வின்’ அகாடமியின் அகில் வினோத், ‘பெஸ்ட் ஷாட்’ டி.டி.ஏ. வீராங்கனை எச்.தியா ஆகியோரும், யு – 9 பிரிவில், எம்.ஏ.கே.சந்திரா அகாடமியின் எஸ்.அத்விக் மற்றும் கோயம்புத்துாரை சேர்ந்த என்.யந்தி ஆகியோரும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

* கார்ப்பரேட் பிரிவில் சென்னை ஜே.அருண்குமார், வெட்டரன் பிரிவில் எஸ்.ஆர்.எஸ்.ஏ., வீரர் ஜி.வினோத் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

சிறந்த அகாடமிக்கான விருதை எஸ்.கே.அகாடமி கைப்பற்றியது. சிறந்த மாவட்ட வீரருக்கான வாசுதேவனன் நினைவு கோப்பை, சேலத்தைச் சேர்ந்த எம்.நிபிஷுக்கு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us