ADDED : ஆக 14, 2026 02:10 PM
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்
ஆண்டாள் ரங்க மன்னர் கோதையுடன் திருவீதி புறப்பாடு: காலை 8:00 மணி. சயன திருக்கோல சிறப்பு அலங்காரம், சாற்று முறை, தீர்த்தம், பிரசாதம் வினியோகம்: மாலை 5:00 மணி. மாணவர்கள் வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி: மாலை 5:30 மணி. ஸ்ருதிலயா குழுவினர் வழங்கும் இசை நிகழ்ச்சி: மாலை 6:00 மணி. சயனாதிவாஸம்: இரவு 8:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
பாலசுப்ரமணிய சுவாமி ஸத்சங்கம்
சவுபர்ணிகாக சங்கீத வித்யாலய மாணவ, மாணவியர் வழங்கும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
நாகாத்தம்மன் கோவில்
அம்மன் மற்றும் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
மூகாம்பிகை கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
ஆத்மநாத சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் -- 2, மறைமலை நகர்.
செல்வ விநாயகர் கோவில்
நித்திய பூஜை: காலை: 7:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
கிருஷ்ணர் கோவில்
நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
அகத்தீஸ்வரர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
வீர ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.
ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
பொது:
இரத்ததான முகாம்
வள்ளலார் நகர் இளைஞர் சங்கம், மனித உரிமைகள் மற்றும் தமிழ்நாடு மனித வள மேம்பாட்டு அமைப்பு, எஸ்.ஆர்.எம்.மருத்துவமனை இணைந்து நடத்தும் நிகழ்ச்சி: நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: தூய பேதுரு ஆலயம், வள்ளலார் நகர் பிரதான சாலை, மாடம்பாக்கம் ஊராட்சி.
சுதந்திர தினவிழா
பொது மக்கள் சார்பில் 80வது சுதந்திர தின விழா கொடியேற்று நிகழ்ச்சி: காலை 9:00 மணி. இடம்: மூகாம்பிகை கோவில் அருகில், சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
