/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை நிறுவனங்களுக்கு சுற்றுலா துறை விருதுகள்
/
மாமல்லை நிறுவனங்களுக்கு சுற்றுலா துறை விருதுகள்
ADDED : அக் 24, 2025 10:32 PM
மாமல்லபுரம்: தமிழக சுற்றுலாத்துறை விருதுகளை, மாமல்லபுரம் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ளன.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய சேவைகளைச் சார்ந்து, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த, சிறந்த நபர்களுக்கு கடந்த 2022 முதல், தமிழக சுற்றுலாத் துறை விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.
இவ்விருது, சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சுற்றுலா வழிகாட்டி, விடுதி, உணவகம் உள்ளிட்ட 15 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
2025ம் ஆண்டிற்கான விருதுகள், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலியில் இயங்கும் 'ஷெரட்டான் கிராண்ட் ரிசார்ட்' மற்றும் ஸ்பா விடுதிக்கு, சிறந்த தங்குமிடம் விருதும், மாமல்லபுரத்தில் இயங்கும் டிராவல் எக்ஸ் எஸ் நிறுவனத்திற்கு, சிறந்த உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர் விருதும் வழங்கப்பட்டன.

