/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா அமைச்சர் ஆய்வு
/
முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா அமைச்சர் ஆய்வு
முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா அமைச்சர் ஆய்வு
முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா அமைச்சர் ஆய்வு
ADDED : நவ 22, 2024 12:16 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரைச் சாலை, முட்டுக்காடில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு குழாம் இயங்கி வருகிறது. இந்த படகு குழாமில், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, முட்டுக்காடு படகு குழாமில், 5 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பல் தயாரிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
இங்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார். தயார் நிலையில் உள்ள மிதவை உணவக கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டு வர, எப்போது திறப்பு விழா நடத்தலாம் என, அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின், வளாகத்தில் உள்ள உணவு மையங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, படகு சவாரியில் அதற்கான பாதுகாப்பு நடைமுறையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டி ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், கோவளம் நீலக்கொடி கடற்கரை பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டு, மேலும் அதன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்தார். அதன் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தார். தொடர்ந்து, மற்ற பகுதி ஆய்வுக்கு புறப்பட்டார்.
ஆய்வின் போது, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சப்- - கலெக்டர் நாராயண சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.