/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளத்தில் பஸ் நிலையம் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
/
கோவளத்தில் பஸ் நிலையம் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
கோவளத்தில் பஸ் நிலையம் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
கோவளத்தில் பஸ் நிலையம் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 23, 2025 12:36 AM

திருப்போரூர், கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை - மாமல்லபுரம் இடையே கோவளம் ஊராட்சி உள்ளது.
இங்கு கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா ஆகியவை உள்ளன. பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணியர் கோவளம் வருகின்றனர்.
கோவளத்திலிருந்து சென்னை கோயம்பேடு, தாம்பரம், அடையாறு, தி.நகர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், கோவளத்தில் பேருந்து நிலையம் இல்லாததால், மாநகர பேருந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே அங்கு வணிக பகுதி, தர்கா, மாமல்லபுரம் செல்லும் சாலை, கடற்கரை சாலை இருப்பதால் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகம் காணப்படுகிறது.
எனவே, கோவளத்தில் பேருந்து நிலையம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

