ADDED : பிப் 19, 2025 06:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த கடுகுப்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மன்னன், 75 நேற்று மதுராந்தகம்- கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் பாலுாரில் இருந்து கடுகுப்பட்டு நோக்கி சாலை ஓரத்தில் நடந்து சென்றார்.
கடுகுப்பட்டு அருகே சுரேஷ் 45 என்பவர் ஓட்டி வந்த டிராக்டர், மன்னன் மீது மோதியது, இதில் தலையில் பலத்த காயமடைந்த மன்னன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.