/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாரம்பரிய விவசாயம் மேம்பாட்டு பயிற்சி
/
பாரம்பரிய விவசாயம் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 14, 2025 10:48 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் வேளாண்மை மையத்தில், பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்ட பயிற்சி, உதவி இயக்குனர் நெடுஞ்செழியன் தலைமையில்,நடந்தது.
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில், 2024 - 2025ன் கீழ், ஒரு கிராமம் அல்லது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்த்த 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து, 20 ஏக்கர் பரப்பில் பாரம்பரிய விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தும் வகையில், பயிற்சி வகுப்பு நடந்தது.
தற்போது உயிர்ம சாகுபடிகள் கடைபிடிக்கப்படும் பல்வேறு இடு பொருட்கள், இயற்கை உரங்கள், தொழு உரங்கள், உயிர் உரங்கள் குறித்து களை மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை குறித்து பேசப்பட்டது.
மேலும் பொருட்களை சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் குறித்து விளக்கப்பட்டது.
சின்ன வெண்மணி, கீழ்செவலை, வில்வராயநல்லுார் கிராமங்களைச் சேர்ந்த 22 விவசாயிகள், இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

