/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீராணம் சாலை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் நெரிசல்
/
வீராணம் சாலை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் நெரிசல்
வீராணம் சாலை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் நெரிசல்
வீராணம் சாலை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் நெரிசல்
ADDED : செப் 09, 2025 12:36 AM

திருப்போரூர், வீராணம் சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை மற்றும் வீராணம் சாலை சந்திப்பு உள்ளது.
இவ்வழியாக லாரிகள், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள், தனியார் பள்ளி, கல்லுாரி வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.
பீக் ஹவர்ஸ் எனப்படும் அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். மற்ற நேரங்களில், போலீசார் இல்லாததை பயன்படுத்தி, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி, வேகமாக செல்கின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை குறைக்க, வீராணம் சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்கவும், போலீசாரை நியமிக்கவும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.