/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் மேற்கு மாடவீதியில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்

ADDED : அக் 26, 2025 10:19 PM

திருப்போரூர்: திருப்போரூர் மேற்கு மாடவீதியில், சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தவிர, தற்போது கந்த சஷ்டி பெருவிழா நடைபெற்று வருவதால், மேலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திருப்போரூர் மேற்கு மாட வீதி வழியாக, சரவண பொய்கை குளத்தை ஒட்டிச் செல்லும் ஓ.எம்.ஆர்., சாலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் கார் போன்ற வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
இதனால் நேற்று, ஓ.எம்.ஆர்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, எதிரெதிரே வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன.
அப்போது, சாலை இருபுறமும் 500 மீட்டருக்கு, வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பாதசாரிகள் கூட நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மேற்கண்ட சாலையோரத்தில், இடையூறாக வாகனங்கள் நிறுத்தாத வகையில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.