/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பணம் தராவிட்டால் வசைபாடும் திருநங்கையர் புறநகர் மின்சார ரயில்களில் பயணியர் அவதி
/
பணம் தராவிட்டால் வசைபாடும் திருநங்கையர் புறநகர் மின்சார ரயில்களில் பயணியர் அவதி
பணம் தராவிட்டால் வசைபாடும் திருநங்கையர் புறநகர் மின்சார ரயில்களில் பயணியர் அவதி
பணம் தராவிட்டால் வசைபாடும் திருநங்கையர் புறநகர் மின்சார ரயில்களில் பயணியர் அவதி
ADDED : ஜூலை 02, 2025 10:40 PM
மறைமலை நகர்:புறநகர் மின்சார ரயில்களில், திருநங்கையர் தொல்லையால் பயணியர் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில் தடத்தில் தினமும், 60க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக சென்று வருகின்றனர்.
இந்த மின்சார ரயில்களில் சமீப காலமாக, திருநங்கையர் பயணியரை தொந்தரவு செய்து, மிரட்டி காசு கேட்பதாக, பயணியர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயணியர் கூறியதாவது:
புறநகர் மின்சார ரயில்களில் கடந்த சில மாதங்களாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் திருநங்கையர் பயணியரை காசு கொடுக்கும்படி தொந்தரவு செய்கின்றனர்.
குறிப்பாக, வடமாநில தொழிலாளர்களை மிரட்டி, அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பறித்துச் செல்கின்றனர்.
இவ்வாறு பறித்துச் செல்லும் போது சில நேரங்களில், அவர்களை சிறிய அளவில் தாக்கியும், ஆபாச சைகைகள் செய்தபடியும் செல்கின்றனர்.
திரிசூலம், பல்லாவரம் தொடங்கி சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் வரை, திருநங்கையர் பயணம் மேற்கொள்கின்றனர். உள்ளூர் பயணியரை இவர்கள் பெரும்பாலும் தொந்தரவு செய்யாமல், கொடுக்கும் பணத்தை வாங்கிச் செல்கின்றனர்.
ஆனால் வட மாநில தொழிலாளர்களிடம் எவ்வளவு பணம் எடுத்தாலும், திரும்ப தராமல் ஓடி விடுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்று ரயில்களில் பயணியருக்கு தொந்தரவு செய்வோரை, ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்த பின், இவர்களால் தொல்லை இல்லாமல் இருந்தது.
தற்பொழுது மீண்டும் இதே வேலையில் ஈடுபட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த ரயில்வே போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.