/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏகாட்டூரில் திருநங்கைக்கு சரமாரி கத்தி வெட்டு
/
ஏகாட்டூரில் திருநங்கைக்கு சரமாரி கத்தி வெட்டு
ADDED : அக் 14, 2025 10:48 PM
திருப்போரூர்:கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூரில், திருநங்கையை கத்தியால் வெட்டியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, சோழிங்கநல்லுார் அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி, 30; திருநங்கை.
இவர் நேற்று அதிகாலை 2:00 மணியளவில், கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் டோல்கேட் அருகே, மற்ற திருநங்கையருடன் நின்றிருந்தார்.
அப்போது அங்கு, திருநங்கை உட்பட மூன்று பேர், ஆட்டோவில் வந்து இறங்கினர்.
உடனே அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால், திருநங்கை மகாலட்சுமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.
தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், காயமடைந்த மகாலட்சுமியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த திருநங்கை உட்பட சிலருடன் மகாலட்சுமிக்கு முன்விரோதம் இருந்ததாகவும், அந்த கும்பல் வந்து வெட்டிவிட்டு தப்பியிருக்கலாம் எனவும் தெரிகிறது.