தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஜி.எஸ்.டி., சாலையில் மரக்கிளைகள் அகற்றம்

 ஜி.எஸ்.டி., சாலையில் மரக்கிளைகள் அகற்றம்

 ஜி.எஸ்.டி., சாலையில் மரக்கிளைகள் அகற்றம்


ADDED : ஜூன் 29, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடுவாஞ்சேரி, ஜூன் 30--

மகேந்திரா சிட்டி முதல் வண்டலுார் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் மைய தடுப்பில் வளர்க்கப்பட்ட மரக்கிளைகளை நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

சென்னையின் நுழைவு வாயிலாக, செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான 39 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலை உள்ளது.

இந்த சாலை, 2023ம் ஆண்டு 270 கோடி ரூபாயில், எட்டு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போது, வரத்து -போக்கு ஆகிய வழித் தடங்கள் இடையே 'சென்டர் மீடியம்' எனும் மைய தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

இந்த தடுப்பு சுவர் நடுவே செம்மண் நிரப்பப்பட்டு, மரக்கன்று நட்டு வளர்க்கப்பட்டன.

அந்த மரங்கள், தற்போது பெரிய அளவில் வளர்ந்து, அவற்றின் கிளைகள் பக்கவாட்டில் வளைந்து வாகனங்கள் மீது மோதி, அடிக்கடி விபத்துகள் நடந்தேற காரணமாக அமைந்தன.

தவிர, மரக்கிளை களால் சிக்னல் மற்றும் எச்சரிக்கை விளக்கு மறைப்பு மற்றும் சாலையின் நடுவே கிளைகள் முறிந்து விழுந்ததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம்அடைந்தனர்.

இதனால், மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், மரக்கிளைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மகேந்திரா சிட்டி முதல் வண்டலூர் வரை மைய தடுப்பு சுவர் நடுவே வளர்ந்துள்ள, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி, கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகிறது.

இந்த பணியில், ஒன்பது ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த இரு தினங்களில் மரக்கிளைகள் அகற்றும் பணி முடிவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us