/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்து ஏற்பட்ட பகுதியில் மரங்கள் வெட்டி அகற்றம்
/
விபத்து ஏற்பட்ட பகுதியில் மரங்கள் வெட்டி அகற்றம்
ADDED : ஏப் 12, 2025 08:52 PM
சிங்கபெருமாள் கோவில்:சென்னை -- -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் சாலை சந்திப்பு உள்ளது.
இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சந்திப்பில் கடந்த 31ம் தேதி இரவு போக்குவரத்து சிக்னலில் நின்று இருந்த கார் மீது லாரி மோதி குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். நால்வர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பகுதியில் சாலை மீடியனில் இருந்த மரங்கள் சிக்னல் விளக்குகளை மறைத்தும் நெடுஞ்சாலையில் விளக்குகள் எரியாததாலும் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து இடையூறாக உள்ள மரங்களை வெட்டி உத்தரவிட்டனர். இதையடுத்து, திருத்தேரி சிக்னல் பகுதியில் இருந்து 100 மீட்டர் துாரம் வரை உள்ள மரங்கள் வெட்டி அகற்றபட்டு வருகின்றன.

