/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா துவக்கம்
/
திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா துவக்கம்
திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா துவக்கம்
திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : மார் 31, 2025 02:21 AM

திருப்போரூர்:செம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் வசந்தகால மஹா நவராத்திரி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி கோவில் உள்ளது. இங்கு கடந்த 2016ம் ஆண்டில், 9 அடி மூலிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் வசந்த கால நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டிற்கான 15ம் ஆண்டு விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்மன் வீதி உலா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.