/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் - காட்டூர் சாலை மின்விளக்கு பழுதால் தவிப்பு
/
திருப்போரூர் - காட்டூர் சாலை மின்விளக்கு பழுதால் தவிப்பு
திருப்போரூர் - காட்டூர் சாலை மின்விளக்கு பழுதால் தவிப்பு
திருப்போரூர் - காட்டூர் சாலை மின்விளக்கு பழுதால் தவிப்பு
ADDED : பிப் 12, 2025 12:25 AM

திருப்போரூர், திருப்போரூர்- - காட்டூர் சாலையைச் சுற்றி, பல கிராமங்கள் உள்ளன. மேலும், இச்சாலை வழியாக அம்மாபேட்டை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், தேவைகளுக்கும் மக்கள் செல்கின்றனர். தண்ணீர் லாரிகள் உட்பட ஏராளமான வாகனங்களும் இச்சாலையில் செல்கின்றன.
இந்த சாலையில் கண்ணகப்பட்டு ஏரி அருகே இருந்து காட்டூர் வரை மின் விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
அவ்வப்போது சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படும் போது, அவை தெரியாமல் பின்தொடர்ந்து வரும் வாகனம் மோதும் நிலை ஏற்படுகிறது.
மேலும், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இச்சாலையில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.