/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுனாமி நினைவு தினம்: மீனவர்கள் அனுசரிப்பு
/
சுனாமி நினைவு தினம்: மீனவர்கள் அனுசரிப்பு
ADDED : டிச 27, 2025 05:59 AM

மாமல்லபுரம்: சுனாமி நினைவு தினமான நேற்று, மாமல்லபுரத்தில் மீனவர்கள் துக்கம் அனுசரித்தனர்.
இந்தோனேஷிய நாட்டில் ஆழ்கடலில், கடந்த 2004 டிச., 26ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலை உருவாகி, பல்வேறு நாடுகளின் கடற்கரை பகுதிகளை தாக்கியது.
தமிழக கடற்கரை பகுதிகளும், சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகின.
இதில், மீனவர்கள் உள்ளிட்ட பல்லாயிரம் பேர் இறந்தனர். பலர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். இத்துயரம் நிகழ்ந்து, 21 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நாளை முன்னிட்டு நேற்று, மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார், இடைக்கழிநாடு உள்ளிட்ட பகுதிகளில், மீனவர்கள் மீன் பிடிப்பதை தவிர்த்தனர்.
கடலில் பால் வார்த்து, துக்கம் அனுசரித்தனர்.
சதுரங்கப்பட்டினம் டச்சுக்கோட்டை, நினைவுத்துாண் பகுதியில், மெழுகுவர்த்தி ஏற்றி, மவுன அஞ்சலி செலுத்தினர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கல்பாக்கத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில், பல்வேறு தரப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

