/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
6 வயது சிறுவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி
/
6 வயது சிறுவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி
6 வயது சிறுவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி
6 வயது சிறுவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி
ADDED : ஜூன் 28, 2025 10:20 PM
பல்லாவரம்:திரிசூலத்தில், ஏரியில் மூழ்கி 6 வயது சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல்லாவரம் அடுத்த திரிசூலம், ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்; ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் ஹன்சிக் சாய், 6. அதே பகுதியைச் சேர்ந்த இந்திரா மகன் மகதீஷ், 6. இருவரும், அம்மன் நகரில் உள்ள அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று விடுமுறை என்பதால், இருவரும் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, சிறுவர்கள் இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அப்போது, ஹன்சிக் சாயின் தந்தை சதீஷ்குமார், அருகே உள்ள ஏரிக்கு சென்று பார்த்தார். அங்கு சிறுவர்கள் இருவரும், தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தனர்.
அதிர்ச்சியடைந்தவர் அங்கிருந்தோரின் உதவியுடன் இருவரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், இருவரும் இறந்தது தெரியவந்தது.
இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.