/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 'மாவுக்கட்டு'
/
செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 'மாவுக்கட்டு'
ADDED : ஏப் 24, 2025 01:34 AM
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் காவல் எல்லைக்கு உட்பட்ட படாளம் கூட்டுச்சாலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள், சாலையோரம் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, படாளம் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், படாளம் அடுத்த திருமலைவையாவூர் காட்டுப் பகுதியில் இவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கி இருந்த இரு இளைஞர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது, இளைஞர்கள் காட்டுப் பகுதியில் இருந்து தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்ததில், இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், இருவருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டது.
விசாரணையில் இவர்கள், சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன், 20, மதன்குமார், 22, என்பதும், இவர்கள் மீது கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.
பின், இருவரையும் கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

