/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஐ.டி., ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது
/
ஐ.டி., ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது
ADDED : அக் 27, 2025 11:30 PM

ஆவடி: நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 34; ஐ.டி., ஊழியர். கடந்த 20ம் தேதி திருமுல்லைவாயிலில் சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, இரவு 10:30 மணியளவில், வீட்டிற்கு செல்வதற்காக திருமுல்லைவாயில் ரயில் நிலையம் வந்துள்ளார்.
அப்போது, இருவர் அவரை கத்திமுனையில் மிரட்டி 30,000 ரூபாய் மதிப்பிலான 'விவோ' மொபைல் போன், 40,000 ரூபாய் மதிப்பிலான லேப்டாப் ஆகியவற்றை பறித்து தப்பினர்.
இது குறித்து விசாரித்த ஆவடி ரயில்வே போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்த வெற்றி, 19, சுர்ஜித், 22, ஆகியோரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
மொபைல் போனை விற்ற நிலையில், அவர்களிடம் இருந்து 'லேப்டாப்' பறிமுதல் செய்யப்பட்டது.

