/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆற்று மணல் கடத்திய இரண்டு பேர் கைது
/
ஆற்று மணல் கடத்திய இரண்டு பேர் கைது
ADDED : ஜூலை 20, 2025 10:29 PM
சித்தாமூர்:ஓங்கூர் ஆற்றில் இருந்து, பைக்கில் ஆற்று மணலை மூட்டை கட்டி கடத்தி சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சித்தாமூர் அடுத்த, சிறுமயிலுார் பகுதியில் உள்ள ஓங்கூர் ஆற்றில் இரவு நேரத்தில் பைக்கில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக சூணாம்பேடு போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 'ஸ்பிளண்டர்' பைக்கில் இரண்டு மணல் மூட்டையுடன் வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது, வீடு கட்டுவதற்காக ஓங்கூர் ஆற்றில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து மணல் கடத்திய சிறுமயிலுார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 31, மற்றும் கணபதி, 29, ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.