ADDED : ஜன 10, 2025 02:15 AM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 30. கடந்த 7ம் தேதி இரவு, தன் 'டியோ' ஸ்கூட்டரை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டுச் சென்றார்.
மறுநாள் காலை பார்த்த போது, ஸ்கூட்டர் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து சங்கர், பாலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்படி, சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், சீத்தனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த குணா, 22, அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் விஷ்வா,22, ஆகியோர் திருடியது தெரிந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து மேலும் விசாரித்ததில், குணா மீது காஞ்சி தாலுகா, வாலாஜாபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் உள்ளது தெரிந்தது.
விசாரணைக்குப் பின், இருவரும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

